கொரோனா: மூன்று மாதம் நீட்டித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு.!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மே 3 ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இருந்தபோதும் இந்தியாவின் கொரோனா வைரஸ் பரவல் குறையவில்லை.

குறிப்பாக தமிழகத்தில் வைரஸ் தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் ஊரடங்கு உத்தரவால் சிறு, குறு முதல் ஐடி நிறுவனங்கள் வரை அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதனால் பல்வேறு மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.

ஒருசிலர் உண்ண உணவின்றி கஷ்டப்பட்டு வருகின்றனர்.

இந்த ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படும் என கூறப்படுகிறது. இது குறித்து இன்று பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்நிலையில் சொத்து வரி குடிநீர் கட்டணம் செலுத்த ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைத்து ஊராட்சிகளிலும் மூன்று மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Popular posts from this blog

சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேருக்கு கொரோனா வந்தது எப்படி?

ஊரடங்கு நீட்டிப்பு.. ஆனால் வேறு மாதிரி இருக்கும்.. முதல்வர்களுடனான மீட்டிங்கில் மோடி கூறியது என்ன?