Posts

ஊரடங்கு நீட்டிப்பு.. ஆனால் வேறு மாதிரி இருக்கும்.. முதல்வர்களுடனான மீட்டிங்கில் மோடி கூறியது என்ன?

Image
டெல்லி: நாட்டில் ஊரடங்கு நிலையே தொடர வேண்டுமா என்பது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் முக்கியமாக சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 9 மாநில முதல்வர்கள் மட்டுமே பேசுவதற்கு இதில் அனுமதிக்கப்பட்டிருந்தது. மற்றவர்கள் தங்கள் கருத்துக்களை சமர்ப்பித்தனர். கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது முழுமையாக தட்டை என்ற நிலைக்கு மாறவில்லை என்பதை அனைத்து மாநில முதல்வர்களும் ஒப்புக்கொண்டனர். முதல்வர்கள் இன்னமும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு தேவை இருக்கிறது. ஊரடங்கு தளர்வு என்பது அமலாக்கப்பட்டால் பாதிப்பு தொடரக் கூடும் அல்லது அதிகரிக்கக்கூடும் என்று பல முதல்வர்கள் கவலை தெரிவித்தனர். அதே நேரம் இப்படியே ஊரடங்கு நிலைமை தொடர்ந்தால் வேலைவாய்ப்பு வருமானம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்வார்கள். பசியால் மக்கள் வாடக்கூடிய நிலைமை வரும் என்றும் சில மாநில முதல்வர்கள் எச்சரிக்கை விடுக்க தவறவில்லை. அமித் ஷா இவை அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார் பிரதமர் மோடி. அவருடன் உள்துறை...

கொரோனா: மூன்று மாதம் நீட்டித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு.!!

Image
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மே 3 ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இருந்தபோதும் இந்தியாவின் கொரோனா வைரஸ் பரவல் குறையவில்லை. குறிப்பாக தமிழகத்தில் வைரஸ் தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் ஊரடங்கு உத்தரவால் சிறு, குறு முதல் ஐடி நிறுவனங்கள் வரை அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதனால் பல்வேறு மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். ஒருசிலர் உண்ண உணவின்றி கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்த ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படும் என கூறப்படுகிறது. இது குறித்து இன்று பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்நிலையில் சொத்து வரி குடிநீர் கட்டணம் செலுத்த ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைத்து ஊராட்சிகளிலும் மூன்று மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேருக்கு கொரோனா வந்தது எப்படி?

Image
கொரோனா முழு அடைப்பின் போது, ​​சென்னையின் திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பம் நடத்திய பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்ற பதினைந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மற்றும் இவர்கள் 15 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றது. கார்ப்பரேஷன் அதிகாரிகளின் கூற்றுப்படி, அவர்களில் இரு சுகாதாரத் தொழிலாளர்கள் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும் இவர்கள் அனைவரும் 40 வயதுக்கு குறைவானவர்கள் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவிக்கின்றார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மூன்று மாடி கட்டிடத்தின் வெவ்வேறு தளங்களில் வசிக்கிறார்கள் மற்றும் பிரார்த்தனைக் கூட்டம் அண்மையில் தரை தளத்தில் நடைபெற்றது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. கூட்டத்தில் குடும்பத்திற்கு வெளியில் இருந்து வந்தவர்கள் இருந்தார்களா என்பது குறித்து இன்னும் விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன, ஆனால் இதுவரை கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் அனைவரையும் கண்டுபிடித்துள்ளோம்" என்றும் அந்த அதிகாரி தெரிவிக்கின்றார். சனிக்கிழமையன்று மட்டும், சென்னை கார்ப்பரேஷனின் திரு.வி.க நகர் மண்டலத்தில் மொத்...